திருச்சி மாநகர் பகுதிகளில் பேருந்து நிலையம், முக்கிய சிக்னல் பகுதிகளில் திருநங்கைகள் பிச்சை எடுப்பதும் மேலும் பேருந்து நிலையங்களில் வரும் பயணிகளை வற்புறுத்தி பாலியல் தொழில் ஈடுபடுவதும் அதிகமாகி வருவதாக புகார்கள் வந்தது.
மேலும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னதாக திருநங்கை ஒருவர் ஒருவரை பாலியல் தொழிலுக்கு அழைத்து கொலை செய்து கைதான சம்பவமும் நடந்தது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர காவல் துறையினர் இணைந்து திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதும் மேலும் அவர்களுக்கான குடியிருப்பு வசதிகளை கொடுப்பதும் என முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் ஸ்ரீதேவி, உதவி ஆணையர்கென்னடி, கோட்டாட்சியர் வைத்தியநாதன், வட்டாட்சியர், சமூக நலத்துறை அதிகாரிகள் திருநங்கைகளிடம் அவர்களது கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.
வருவாய்துறை சார்பாக அவர்களுக்கு இருங்களூர் மற்றும் நாகமங்கலம் பகுதியில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள வீடு மாதம் 5 ஆயிரம் ரூபாய் முன் தொகையாக கொடுத்து அவர்களுக்கு குடியிருப்பு வசதியை மேம்படுத்தி தர மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டு உள்ளார் .
மேலும் அவர்களுக்கான உதவித்தொகை வழங்குவது குறித்தும் வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர்களிடம் நேரடியாக குறிப்பிட்டனர். குடியிருப்பு வசதிகளை செய்து தர உறுதி அளிக்கப்பட்டது. மாநகர காவல் துறை சார்பாக அவர்களுடைய முழு பெயர் விபரங்களை பதிவு செய்து மேலும் அவர்களுக்கு தேவையான சுயதொழில் தொடங்குவதற்கான கோரிக்கைகளை பெற்று மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளபட உள்ளது.
திருச்சி மாவட்டத்தை பொறுத்த அளவு 600க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். இதில் மாநகரில் 200 பேரும் மீதும் உள்ளவர்கள் பல்வேறு மாநிலங்களிலும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இவர்களுடைய முழு விபரங்கள் தற்பொழுது மாநகர காவல்துறையின் கணிப்பொறியில் சேகரிக்கப்பட்டுள்ளது.
மாநகர காவல்துறை பொறுத்த அளவு இனி ஒரு திருநங்கை கூட பாலியல் தொழிலில் ஈடுபடக்கூடாது. மேலும் பிச்சை எடுப்பதும் யாரிடமும் அடித்து பிடுங்க கூடாது என்பதை அறிவுறுத்தி அவர்களிடம் வேண்டுகோள் விடுத்து கலந்தாலோசனை கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது.
Comments