Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அக்னிச் சிறகுகள் புத்தகத்தை 151 நிமிடங்களில் பிழையின்றி படித்து அரசு பள்ளி மாணவிகள் புதிய சாதனை!!

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் எழுதிய “அக்னிச் சிறகுகள்” என்னும் புத்தகத்தை 151 நிமிடங்களில் படித்து திருச்சி அரசுப் பள்ளி மாணவிகள் புதிய சாதனை படைத்துள்ளனர். இது‌ சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளனர். இதைப்பற்றிய தொகுப்பை காண்போம்.

ஊரடங்கு ஆரம்பமானது முதல் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் செயல்படவில்லை. இந்நிலையில் மாணவர்களின் மன இறுக்கத்தை போக்குவதற்காக பயனுள்ள வகையில் செலவிடுவதற்காக புத்தகம் படித்தல், நடனமாடுதல், பாட்டு பாடுதல், கவிதை, கட்டுரை இந்த நடவடிக்கைகளில் ஈடுபடலாம் எனவும் கல்வி ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

அதனைத் தொடர்ந்து திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி தொடக்க பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் நான்காம் வகுப்பு முடித்து ஐந்தாம் வகுப்பு செல்லும் சிறுமிகள் த.யோகிதா, செ. ஸ்ரீலேகா, மோ. இமயஜோதி ஆகிய மூன்று பேரும் அக்னிச் சிறகுகள் புத்தகத்தை 151 நிமிடங்களில் (2.31) இரண்டரை மணி நேரத்தில் பிழையின்றி படித்து முடித்து புதிய சாதனை படைத்துள்ளனர்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *