Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அரசு வணிக வளாகத்தில் புதிய சார் பதிவாளர் அலுவலகம்

திருச்சிராப்பள்ளி தில்லைநகர், அரசு வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள தில்லை நகர் சார்பதிவகம் பொதுமக்கள் வந்து செல்வதற்கு எளிதாகவும், போக்குவரத்து வசதி மிகுந்த நகரின் மையப்பகுதியில் அமையப்பெற்றுள்ளது. 

தற்போது நடைமுறையிலுள்ள 1ம் எண் இணை சார்பதிவகத்தில் இருந்து செங்குளம், வார்டு AD, வரகனேரி, வார்டு U, வார்டு V, வார்டு O (H)> வார்டு I (W) ஆகிய 7 கிராமங்களை பிரித்தும் மற்றும் உறையூர் சார்பதிவகத்திலிருந்து தற்போது நடைமுறையிலுள்ள வார்டு K (புத்தூர் வடக்கு), வார்டு Z (புத்தூர் தெற்கு), வார்டு E (புதிய வார்டு Y), வார்டு D (புதிய வார்டு M), தாமலவருபயம் (புதிய வார்டு H), புத்தூர், வார்டு B (வார்டு G), வார்டு C (வார்டு L),

வார்டு I, வார்டு J (உய்யக்கொண்டான் திருமலை), பாண்டமங்கலம் ஆகிய 11 கிராமங்களை பிரித்தும் என ஆகக்கூடுதல் 18 கிராமங்களை உள்ளடக்கியதாக புதிதாக உருவாக்கப்பட்ட தில்லை நகர் சார்பதிவகம் அமையப்பெற்றுள்ளது. புதியதாக உருவாக்கப்பட்டுள்ள தில்லை நகர் சார்பதிவகம் ஆண்டிற்கு சுமார் 5,000 ஆவணப்பதிவுகள் மூலம் அரசுக்கு

சுமார் ரூ.52 கோடி வருவாய் ஈட்டக்கூடியதாகும். இவ்வலுவலகத்தின் மூலம் சுமார் 2,00,000 பொதுமக்கள் பயனடைவர். இந்த புதிய அலுவலகத்தை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் இரா.வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், தியாகராஜன், எம்.பழனியாண்டி, துணை பதிவுத்துறை தலைவர் இராமசாமி, உதவி பதிவுத்துறை தலைவர் ராஜா, உதவி பதிவுத்துறை தலைவர் (சரகம்) சுரேஷ்குமார், மாவட்ட பதிவாளர் (தணிக்கை) கார்த்திகேயன், உறையூர் சார் பதிவாளர் உமாதேவி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் த.இராஜேந்திரன், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *