தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலத்தை சேர்ந்தவர் அப்துல் காதர் இவருடைய மகன் அப்துல் ரஹ்மான் (25). இவர் உறவினர் வீடு திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ளது. நேற்று இரவு உறவினர் வீட்டிற்கு அவர் வருகை தந்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
சாலியமங்கலத்தில் உள்ள அப்துல் காதர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அப்துல் காதரின் மகனான அப்துல் ரகுமான் திருச்சியில் இருப்பதை செல்போன் டவர் மூலம் அறிந்து கொண்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை சுப்பிரமணியபுரத்தில் உள்ள அப்துல் ரஹ்மானின் உறவினர் வீட்டிற்கு வருகை தந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது விசாரணை முடிந்து அப்துல் ரஹ்மானை தஞ்சாவூர் அழைத்துச் சென்றனர்.
இதே போல புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வடகாடு என்ற பகுதியில் வசித்து வரும் அப்துல்கான் என்ற அப்துல் காதர் (40) அவரின் தோட்டத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
இவர் தடை செய்யப்பட்ட சிமி அமைப்பில் உறுப்பினராகவும், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை முதல் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் என் ஐ ஏ அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் சோதனையால் அந்தப் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments