Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஸ்ரீரங்கம் கோயிலில் தினமும் 5000 பக்தர்களுக்கு நீர்மோர் – இணை ஆணையர் துவங்கி வைத்தார்

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் கோடை வெப்பம் அதிகரித்து வருவதை யொட்டி கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் சிரமமின்றி நடக்க அனைத்து இடங்களிலும் தரைவிரிப்பு விரிக்கப்பட்டுள்ளது. மேலும் கோடை வெப்பத்தின்  தாக்கத்திலிருந்து பக்தர்களை காக்கும் பொருட்டு இன்று 04.03.2022 முதல் தங்கக் கொடிமரம் அருகிலும் துர பிரகாரம் கட்டணம் மில்லா வரிசையிலும் சுமார் 5000 பக்தர்களுக்கு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை நீர்மோர் கோடை காலம் முழுவதும் வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு  செய்துள்ளது. இக்கோவில் இணை ஆணையர் மாரிமுத்து பக்தர்களுக்கு மூலிகை நீர்மோர் வழங்கி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் உதவி ஆணையர் கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், உதவி கண்காணிப்பாளர் பி.ஆர்.கிருஷ்ணா மற்றும் அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோர் உடனிருந்தனர். இன்று முதல் கோடை காலம் முழுவதும் உபயமாக மூலிகை மோர் வழங்க திருச்சி வேதா பால் நிறுவனர் ரமேஷ் முன் வந்துள்ளார்.

மோரில் கறிவேப்பில்லை, கொத்தமல்லி, இஞ்சி, மிளகாய், பெருங்காயம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *