திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி தொழில் நுட்ப கழகத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. தமிழக மாணவர்கள் மட்டுமல்லாது அகில இந்திய அளவிலான மாணவ மாணவிகளும் சர்வதேச மாணவ மாணவிகளும் கல்லூரியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
அதன் ஒருப்பகுதியாக கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த தாமஸ் அகஸ்டின் இவரது மகன் பாபு தாமஸ் இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். பாபு தாமஸ் குடும்பம் எர்ணாகுளத்தில் உள்ளது. இந்த நிலையில் பாபு தாமஸ் (37) என்.ஐ.டி.ஐ கல்லூரி குடியிருப்பில் தங்கி எலக்ட்ரானிக் பிரிவில் (பிஎச்டி) ஆராட்சி பட்டம் பயின்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று (12.02.2023) மாலை வழக்கம் போல் கல்லூரி வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் அடிப்பதற்காக சென்றுள்ளார். அப்படி சென்ற பாபு தாமஸ் மாரடைப்பு காரணமாக தண்ணீரில் மூழ்கி உள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்த மாணவர்கள் பாபு தாமசை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பாபு தாமசை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பாபு தாமஸ் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.
அதன் அடிப்படையில்துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். என்ஐடி கல்லூரி வளாகத்தில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments