திருச்சி அரியமங்கலம் முதல் திருவெறும்பூர் வரை நடைபெறும் பாதாளச் சாக்கடை பணிகள் குறித்த குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி ஆணையர் பங்கேற்றார்.
அந்த கூட்டத்தில் குறிப்பிட்ட பகுதி மக்களை பங்கேற்க அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. கூட்டம் முடித்த மாநகராட்சி ஆணையர் புறப்படும் போது திருச்சி காட்டூர் அருந்ததியர் காலனியில் கடந்த 4 மாதகாலமாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து மாநகராட்சி ஆணையரது காரை அப்பகுதி மக்கள் முற்றுகையிட முயற்சித்தனர்.
உடனடியாக மாற்றுப்பாதையில் மாநகராட்சி ஆணையர் சென்றதால், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர் மக்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
Comments