திருச்சி மாவட்டம் துறையூர் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் உரிய ஆய்வாளர் இன்றி கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக இயங்கி வருவது அதிர்ச்சியை அளிக்கிறது. கடந்த ஒரு வருட காலமாக தற்காலிக ஆய்வாளரின் மேற்பார்வையில் இயங்கி வருவதும்,
தற்பொழுது திருவெறும்பூர் போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார், வாரத்துக்கு இருமுறை மட்டுமே வந்து செல்வதாக கூறப்படுகிறது. இதனால் துறையூர் பகுதி பொதுமக்கள் புதிய வாகன உரிமை மற்றும் புதிபித்து கொள்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், புதிய வாகனங்களுக்கு பதிவு எண் பெறுவதற்கு காலதாமதம் ஆகி வருவதாகவும் தெரிகிறது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து துறையூருக்கென உரிய வாகன ஆய்வாளரை நியமனம் செய்ய வேண்டும் என துறையூர் பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments