தமிழக அரசு இன்றும், நாளையும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதில் 18 வெளியூர் பேருந்துகளும், 16 நகரப் பேருந்துகளும் இயக்கத் தயாராக இருந்தது . இதனை மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் வந்து பார்வையிட்டார்.
மேலும் வரக்கூடிய பேருந்துகளுக்கு கிருமிநாசினிகள் தெளிக்கவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 2046 கோவிட் கிச்சை மையங்களில் படுக்கைகளுடன் வசதிகள் உள்ளது.
இதில் 1250 ஏற்கனவே கோவிட் தொற்றுடையவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 800 படுகைகள் காலியாக உள்ளது. 100 படுக்கைகள் ஆக்சிஜன் கூடியது மட்டுமே தற்போது காலியாக உள்ளது.
வரும் (24.05.21) திங்கட்கிழமை முதல் காய்கறி வாங்க யாரும் வீட்டை விட்டு வரக் கூடாது. அந்தந்த பகுதிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலமாக காய்கறிகள் வாகனங்களில் அவர்களுக்கு வந்து சேரும் என மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK
Comments