திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிப்பிற்கான வழிகாட்டுதல்கள் சேர்க்கை விவரங்கள் போன்ற படிப்பினைகள் சம்பந்தப்பட்ட தகவல்களை உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் பெறுவதற்காக புதிதாக உதவி மையம் ஏற்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகளை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் இன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்து சேவை மையத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது அந்த சேவை மைய டேபிளில் தொலைபேசி இல்லாததால் இந்த சேவை மையத்திற்கான தொலைபேசி எங்கே என்று கேட்டார். அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள துணைவேந்தர் மற்றும் ஆசிரியர்கள் அருகில் உள்ள டேபிளில் தொலைபேசி உள்ளது என்று பதில் அளித்தனர்.
அதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் சேவை மையம் அமைத்தது நோக்கமே மாணவர்களுக்கு மூன்று வகையில் உதவி புரிய வேண்டிதான் அவ்வாறு ஒன்று உதவி மையத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டால், அவர்களுக்கு உண்டான விளக்கம் அளிப்பது மற்றொன்று இமெயில் மூலம் விளக்கம் அளிப்பது மூன்றாவது நேரடியாக வருவோர்க்கு விளக்கம் அளித்து சேவை புரிவது.
இதில் முதன்மையானவை பெரும்பாலும் தொலைபேசியில் தான் வரும் அப்படி இருக்கையில் சேவை மைய டேபிலில் தொலைபேசி இல்லாமல் இருந்தால் எப்படி அவர்கள் உடனடியாக தொடர்பு கொண்டு சேவை பெறுவார்கள். ஆகையால் உடனடியாக டேபிளில் தொலைபேசி வைக்குமாறு துணைவேந்தருக்கும் சேவை மைய நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அவருடன் உயர் கல்வித்துறை கூடுதல் செயலர் உயர் கல்வித்துறை இயக்குனர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு எத்துறையில் இருக்கும் என ஆராய்ந்து அதற்கான படிப்பை தேர்வு செய்வது எப்படி என்பது தொடர்பான மண்டல அளவிலான முதலாவது பயிற்சி கூட்டத்தை தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments