திருச்சி மாநகராட்சி திருவெறும்பூர் மற்றும் காட்டூர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிறுவனம் (எல் அன் டி) மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 41 வது வார்டு பகுதியான புத்துக்கோவில் தெருவில் பாதாள சாக்கடைக்காக துளையிடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தை சேர்ந்த ஜித்தன் சர்க்கார் மகன் ராஜ்குமார் சர்க்கார் (22). இவர் அந்த தனியார் நிறுவனத்தில் மூன்று மாத காலமாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பாதாள சாக்கடை பணிகளுக்காக துளையிடும் பணிக்கு ஜெனரேட்டர் மூலம் மின்விளியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அப்படி செய்யப்பட்ட மின்சாரம் தாக்கியதில் ராஜ்குமார் தூக்கி வீசப்பட்ட நிலையில் அவரை உடனிருந்த சக தொழிலாளர்கள் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதோடு இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உறிய பாதுகாப்பின்றி மெத்தன போக்குடன் பணிகளை மேற்கொள்ளும் எல்என்டி நிறுவனத்தையும், திருச்சி மாநகராட்சியையும் கண்டித்தும் உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டியும் நாளை துவாக்குடி அரசு மருத்துவமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments