திருச்சி பெரிய கம்மாள தெரு அருகே நடுகல்லுகார தெருவில் வசிப்பவர் ஸ்ரீபால்.வட மாநில தொழிலதிபரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குட்கா விற்பனை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார்.
Advertisement
இதனிடையே ஸ்ரீபால் கடந்த சில மாதங்களாக பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு அதிகளவில் குட்கா விற்பனை செய்தது அதில் முறையாக அது தொடர்பாக வருமான வரி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக பெங்களூரில் உள்ள அவரது நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தற்போது திருச்சியில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரி சோதனையானது நடைபெற்று வருகிறது. நடுக்கல்லுக்கார தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த ஐந்து வருமான வரி துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
தமிழகத்தில் குட்கா விற்பனை தடை செய்யப்பட்ட நிலையில் இவர் பெங்களூரில் குட்கா பொருட்களை விற்பனை செய்துள்ளார்.அதில் கிடைத்த வருமானத்திற்கு முறையாக வருமான வரி செலுத்தாதால் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
Comments