Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் ஆலமரத்துக்கு கயிறு கட்டிய வட மாநில பெண்கள்

வடசாவித்திரி பூஜை இந்தியாவில் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். சாவித்திரியின் மன உறுதியையும், தன் கணவனை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற பக்தியையும் போற்றும் வகையில் இந்த பூஜை செய்யப்படுகிறது.

இந்தியா முழுவதும் திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக இந்த பூஜையில் பங்கேற்கின்றனர். குறிப்பாக வட மாநிலங்களில் இந்த விழாவானது வெகு சிறப்புடன் நடைபெற்று வருகிறது.

இனிய கணவன் அமையவும், மாங்கல்ய பலம் பெருகவும், கன்னிப்பெண்களும், சுமங்கலி பெண்களும் ஆல மர விழுதுகளில் பூஜை செய்து அனுஷ்டிக்கும் இந்த நிகழ்வு தமிழக பகுதிகள் காரடையான் நோன்பு என கடைபிடிக்கப்படுகிறது. 

அதன்படி திருச்சி பொன்மலையில் வசிக்கும் வட மாநில பெண்கள் பொன்மலை ரயில்வே ஆர்மரி கேட் எதிரே உள்ள கோவில் ஆலமரத்தில் மங்களப் பொருட்கள் வைத்து வழிபாடு செய்து பின்னர் ஆலமரத்தை சுற்றிலும் கயிறு கட்டி தங்கள் கணவன் நீடுழி வாழ வேண்டி வழிபாடு மேற்கொண்டனர்.

மேலும் சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் நெற்றியில் குங்கும திலகமிட்டு மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *