Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

என்டிபிசியில் ஆள்சேர்ப்பு, விரைவாக விண்ணப்பிக்கவும், சம்பளம் 90,000 வரை !!

NTPCன் இந்த ஆள்சேர்ப்புகளுக்கான விண்ணப்பங்கள் நடந்து வருகின்றன, விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி 10 நவம்பர் 2023 என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நியமனங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பொறுந்தும். விண்ணப்பங்ள் ஆன்லைனில் மட்டுமே இருக்கும்.

அதற்காக நீங்கள் NTPCன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம். இதற்கான இணையதள முகவரி – https://ntpc.co.in. இந்த பணியிடங்களுக்கான தேர்வுக்கு தேர்வு எதுவும் நடத்தப்படாது. நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

என்டிபிசியில் மொத்தம் 50 எக்சிகியூட்டிவ் பணியிடங்கள் இந்த ஆள்சேர்ப்பின்  மூலம் நிரப்பப்படும். விண்ணப்பிக்கும் முன், இணையதளத்திற்குச் சென்று அறிவிப்பைப் படிக்கவும். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க, பொது, EWS மற்றும் OBC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் 300 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

SC, ST, PWBD மற்றும் பெண்கள் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இப்பணியிடங்களில் தேர்வு செய்யப்பட்டால் மாதம் ரூபாய் 90 ஆயிரம் சம்பளம். இதனுடன், நெருங்கிய குடும்பத்திற்கு நிறுவனம் தங்குமிடம், மருத்துவச்செலவு மற்றும் பல வசதிகளையும் வழங்கும்

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *