திருச்சி மாவட்டத்தில் சுமார் 360 ஏக்கர் பரப்பளவிலான ஏரி தேவராயநேரி பகுதியில் உள்ளது. அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் முழுவதும் இந்த ஏரி நீர் பாசனத்தை நம்பியே உள்ளன.இந்நிலையில் ஏரியில் சுமார் 200 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் பாசனத்திற்கு நீர் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது வரை விவசாய பணிகளை தொடங்கவில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர்.
திருச்சி மாவட்டம் முழுவதும் விவசாயப் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இப்பகுதி விவசாயிகள் இன்னும் விவசாய பணிகளை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Advertisement
இதுகுறித்து பலமுறை பொதுப்பணித்துறை அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்பதால் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு மனு அளித்தனர்.
தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். எனினும் கழுதை வாயில் போன காகிதம் போல் கொடுக்கின்ற புகார் மனுக்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாததால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியும், ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தனர் அப்பகுதி மக்கள்.
Comments