திருச்சி அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அதற்கேற்ப அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய கட்டாய நிலை மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கு உதவும் வகையில் சமூக பங்களிப்பு நிதி (சி.எஸ்.ஆர்) மூலம் அரசு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை வழங்க திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி முதல்கட்டமாக இன்று கரோனா தொற்றாளர்களை உட்கார வைத்து அழைத்துச் செல்வதற்காக 20 சக்கர நாற்காலிகளை அரசு மருத்துவமனை டீன் வனிதாவிடம், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அலுவலர் லெப்டினன்ட் கர்னல் கார்த்திகேஷ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துப்பாக்கி தொழிற்சாலை தீயணைப்பு அலுவலர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அடுத்தடுத்த கட்டங்களாக மேலும் உதவிகளைச் செய்ய தயாராக இருப்பதாக அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் துப்பாக்கி தொழிற்சாலை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd
Comments