திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், செல்வி.சே.தனலெட்சுமி மற்றும்
செல்வி.வெ.சுபா ஆகிய இருவரும் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2021
ஜுலை 23-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 08-ஆம் தேதி வரை நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் 2020 தடகளப் பிரிவில் 4×400மீ கலப்பு தொடர் ஒட்டப்போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டனர்.
நமது தேசத்திற்கும், தமிழ்நாட்டிற்கும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். இவர்களை பாராட்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு இன்று (10.08.2021) நேரில் வாழ்த்துக்களை
தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் க.பிரபு உடனிருந்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments