திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ். தனது நண்பர்களுடன் துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை பகுதிக்கு சுற்றுலா சென்று விட்டு மீண்டும் ஸ்ரீரங்கம் திரும்புகையில் கரட்டம்பட்டி வனப்பகுதியில் திருச்சியில் இருந்து துறையூர் நோக்கி வந்த கார் மீது மோதியதில் ஆம்னி வேன் அப்பளம் போல் நொறுங்கியது.
இதில் படுகாயம் அடைந்த மோகன்ராஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் ஆம்னி வேனில் வந்த ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (29), ஐயப்பன் (33), ராஜா (39), கோபாலகிருஷ்ணன் (30) மற்றும் காரை ஓட்டி வந்த துறையூரைச் சேர்ந்த அஜய் பிரசாத் (28) ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து புலிவலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments