Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வெற்றி பெற்றவுடன் ஊட்டத்தூர் பகுதியில் வெங்காய பத கிடங்கு அமைக்கப்படும் 

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில்  இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடுகிறது. த.மா.கா வேட்பாளர் தர்மராஜை ஆதரித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஊட்டத்தூர், பெருவளப்பூர், கணகிளியநல்லூர், கல்லக்குடி, புள்ளம்பாடி ஆலம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசுகையில்… வேட்பாளர் தர்மராஜ் வெற்றி பெற்றவுடன் ஊட்டத்தூர் பகுதியில் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு, மானாவாரி விவசாயிகள் பயன்பெறும் வகையில் பருத்தி ஆலை தானியக் கிடங்கு அமைக்கப்படும். பருத்தி மக்காச்சோளம் வெங்காயம் உள்ளிட்ட விலை பயிர்களை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய நேரடி கொள்முதல் நிலையங்கள் மற்றும் புள்ளம்பாடி திருமலைப்பாடி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும் மாணவர்களுக்கு பாலிடெக்னிக் கல்லூரி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து லால்குடி தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *