Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தேசியக் கல்லூரியில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கு

தமிழ்நாடு நூலக கல்விக் குழுவும் திருச்சிராப்பள்ளி தேசிய கல்லூரி நூலக துறையும் இணைந்து டிஜிட்டல் உலகத்தை கட்டமைப்பதில் டிஜிட்டல் நூலகத்தின் பங்கு என்னும் பொறுமையில் ஒரு நாள் தேசிய கருத்தரங்குநடைபெற்றது.

இத்தேசிய கருத்தரங்கின் துவக்க விழாவிற்கு வரவேற்பு உரை வழங்கினார் தேசிய கல்லூரி நூலகர் முனைவர் T. சுரேஷ் குமார் தேசியக் கல்லூரி நூலகத்தை டிஜிட்டல் மையமாகிய முயற்சியை முன்னெடுத்தவர் நூலகர் முனைவர் T. சுரேஷ் குமார் ஆவார் இக்கல்லூரி முதல்வர் முனைவர் கே. குமார் அவர்கள் தம் தலைமை உரையில் தேசியக் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு நடப்பது பொருத்தமானது மாணவர்கள் வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் வலியுறுத்தினார்.

எனதேசிய கருத்தரங்கின் துவக்க உரை ஆற்றிய முனைவர் வி. திருவள்ளுவன் மாண்புமிகு துணைவேந்தர் தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் அவர்கள் முறையாக பயன்படுத்தும் போது டிஜிட்டல் நூலகம் ஒரு வரப் பிரசாதம் என்றார். மாணவர்கள் எந்த ஒரு நிகழ்வின் காட்சி பொருளாக மட்டுமின்றி நிகழ்வின் கருப்பொருளாக விளங்க வேண்டும்.

இது போன்ற கருத்தரங்கிலோ வகுப்பறையிலோ உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் ஒன்றை சொல் தந்துவிடும் அதற்காக காத்திருந்து உள்வாங்கி கொள்ள வேண்டும் நூலகத்துக்கு போகாதவர்கள் அறிஞர் ஆக முடியாது வாசிப்பு சுவாசிப்பு போன்றது உயர் வாழ்வதற்கு அவசியமானது என்றார்.

அண்ணாமலை பல்கலைக்கழக நூலக முனைவர் நாகராஜன் தேசியக் கல்லூரியின் மேனாள் நூலகர் முனைவர் ராகவன் திருச்சி தூய பலனார் கல்லூரி நூலகர்  முனைவர் எம் துரைராஜன் ஆகியோருக்கு நூலக கல்விக் குழுவின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வு நெறியாளர் முனைவர் எஸ் ஸ்ரீனிவாச ராகவன் அவர்கள் தன் வாழ்த்துறையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நவீன தொழில்நுட்பம் வளர்ந்து வரும் வேளையில் நூவகம் பயன்பாடும் டிஜிட்டல் மயமானது அவசியம் அறிவுசார் தலைமுறை வீரியமிக்கதாக வளர்வதற்கு டிஜிட்டல் நூலகம் அவசியம் என கூறினார்.

நூலக கல்வி குழும தலைவர் முனைவர் ஆர்ஆர் சரவணகுமார் அவர்கள் நன்றிகளை வழங்கினார் விழாவிற்கு கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் இளவரசு முனைவர் பிரசன்ன பாலாஜி துறை தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர் புவனேஸ்வரி தேசிய கருத்தரங்கின் நிகழ்வுகளை தொகுந்து வழங்கினார்.

 தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்குகள் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு கட்டுரைகளை வழங்கினார்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *