திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியின் தேசிய நாட்டுநலப்பணி திட்ட அமைப்பு “முதலுதவி” என்ற தலைப்பில் இணைய வழியில் ஒரு ஓர் விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியுள்ளனர். திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் உள்ள நாட்டு நல திட்ட அமைப்பு மற்றும் ஸ்ரீ சத்தியா சாய் சேவா அமைப்பினரும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்விற்கு விருதுநகர் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுவில் இருந்து ஆர்.சுரேஷ் சிறப்பு விருந்தினராக பங்கு கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே அவசர உதவி தேவைப்படும் நேரத்தில் மருத்துவ சிகிச்சைக்கு முன்னரே அளிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையான முதலுதவி பற்றிய ஒரு விழிப்புணர்வவை மாணவர்களுக்கு கற்பிப்பதே. ஒவ்வொரு ஆண்டும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு கல்லூரியின் வளாகத்தில் 6 மணி நேர நிகழ்வாக இந்நிகழ்வு நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக 2 மணி நேரம் இணைய வழியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மயக்கம், பாம்புக்கடி, தீடிர் நெஞ்சுவலி, மின்சாரம் தாக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை எவ்வாறு அளிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
உதாரணமாக பாம்பு கடித்தவர்களுக்கு அந்த இடத்தில் கீறிவிட்டு பொட்டாசியம் பெர்மாங்கனேட் கொடுத்துவிட்டு பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது விஷம் அவர்கள் உடலில் பரவுவதைக் குறைக்க இயலும். திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக நீர் கொடுப்பதை தவிர்த்தல் வேண்டும். காக்கா வலிப்பு நோய் இருப்பவர்களுக்கு உடனடியாக கையில் இரும்பு கத்தி போன்றவற்றை கொடுக்காமல் அவர்களை படுக்க வைத்துஉடனடியாக காதுகளை மூடவேண்டும்.
சில நிமிடங்களில் அவர்களுக்கு வலிப்பு ஏற்பட்டது நின்று விடும். இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பின்பற்றலாம் அதேபோன்று மின்சாரத்தால் தாக்கப்பட்டவர்களினை காப்பாற்றுவதற்கு அவர்களை தொடுதல் ஆபத்தை இரட்டிப்பாக்கும். போர்வை, புடவை போன்றவை மிக நீளமான துணிகளைப் பயன்படுத்தி அவர்களை இழுத்துவிட்டு அவர்களுக்கு பின்னர் உடனடியாக மருத்துவமனை உதவிகளைச் செய்தல் சிறப்பானது. இது போன்று பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு இந்த இணையவழி நிகழ்வின் மூலம் கற்றுத் தரப்பட்டது.
நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மட்டுமின்றி பொதுவாகவே இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியமானது. உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைக்கு முன்னர் இதுபோன்ற முதலுதவி அவர்கள் உயிரை காப்பாற்றுவதற்காக மிக முக்கியமான ஒன்று. இதனை அனைவரும் தெரிந்து கொள்வது மிக அவசியமானதும் கட்டாயமானதும் தான் என்று சிறப்பு விருந்தினராக வந்த சுரேஷ் மாணவர்களிடம் பகிர்ந்துள்ளார்.
திருச்சி ஸ்ரீமதி இந்திரா திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியும் இணைந்து ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான காசோலையை சாரநாதன் பொறியியல் கல்லூரியின் செயலாளர் ரவீந்திரன் மற்றும் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியின் செயலாளர் k.மீனா கடந்த வெள்ளிக்கிழமை திருச்சிக்கு சுற்றுப் பயணம் வந்த முதல்வரை நேரில் சந்தித்து
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve
Comments