Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

இல்லம் தேடி கல்வி அதிகாரி என்ற பெயரில் பள்ளி மாணவியின் தாயாரிடம் ஆன்லைன் மோசடி

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள எழில் நகரை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகள் பெல் வளாகத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பை முடித்துள்ளார். இந்த நிலையில் மத்திய அரசின் கல்வித் தொகை ரூ.28,500 கொடுப்பதாக கூறி மர்ம நபர் அவரது மனைவி சத்யகலாவுக்கு போன் போன் செய்தார்.

தொடர்ந்து வீட்டின் முகவரி மற்றும் விவரங்களை தெளிவாக கூறியதால் அதை நம்பிய சத்தியகலா தொடர்ந்து அவரிடம் பேசி உள்ளார். பின்னர் வாட்ஸ் அப்பில் பார் கோடை அனுப்பி வைத்ததாகவும், அதனை ஸ்கேன் செய்யும் படி கூறிய மர்ம நபரின் whatsapp எண்ணை சோதித்த போது அதில் டிபியில் தமிழக அரசின் முத்திரை இமேஜ் இருந்தது. பார்கோடை கேன் செய்தவுடன் பணம் செலுத்துவது போல சத்தியகலாவிற்கு காண்பித்தது.

இதனால் பண இழப்புஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அந்த மர்ம நபரிடம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பினார். அதற்கு அந்த மர்ம நபர் அந்த தாங்கள் பயப்பட வேண்டாம். நாங்கள் தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் துறையில் பணிபுரிவதாக அடையாள அட்டையை சத்யகலாவின் நம்பருக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து மர்ம நபர்களின் வழிகாட்டல்கள் படி அவர் செயல்படவே அவரது வங்கி கணக்கில் இருந்த 19,890 ரூபாய் மர்ம நபரின் வங்கி கணக்குக்கு சென்றது.

பின்னர் இந்த பணம் தங்களுக்கு ரீபண்ட் செய்யப்படும் என்றும் கூறி மீண்டும் பார்கோடை சத்யகலாவிற்கு எண்ணிற்கு அனுப்பி வைத்து அதில் புதிய ஸ்காலர்ஷிப் எண்ணை டைப் செய்யுமாறு மர்ம நபர் கூறினார். ஆனால் புதிய எண்ணை டைப் செய்த போது சத்தியகலாவின் வங்கி கணக்கில் போதுமான தொகை இல்லாததால் பேமெண்ட் பெயிண்ட் என மெசேஜ் வந்ததால், அந்த மர்ம நபர் ஃபோனை துண்டித்து விட்டார்.

பிறகு தான் ஏமாற்றப்பட்டது அறிந்த சத்திய கலா தனது கணவரிடம் நடந்த விபரத்தை கூறினார். இதுகுறித்து அழகர்சாமி திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *