திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் விவேகானந்தா யோகா மையமும் இணைந்து 7வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இணையவழி யோகா பயிற்சி முகாமினை “வீட்டில் யோகா மற்றும் குடும்பத்தினருடன் யோகா” என்ற தலைப்பில் நடத்தியுள்ளனர்.
இப்பயிற்சி முகாமிற்கு விவேகானந்தா யோகா மையத்தின் பயிற்சியாளர்கள் முனைவர். ஆர் ஸ்ரீதர் மற்றும் முனைவர் சந்தான கிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கி பயிற்சி அளித்தனர். பயிற்சி முகாமில் யோகாவின் முக்கியத்துவம் மற்றும் அதனை சரியான முறையில் மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பயிற்சியாளர்கள் விளக்கினர்.
ஒருவர் அனைத்து யோகாசனங்ஙளை செய்வதைக்காட்டிலும் தனக்கு தேவையான ஆசனங்களையும் மட்டும் பயிற்சி செய்வது மிகுந்த பயனுள்ளதாக அமையும் எனவும் ஆசனங்களை மேற்கொள்ள தகுந்த சூழல் பற்றியும் விவரிதித்தனர். நிகழ்வில் அனைவரும் பயிற்சி செய்ய ஏதுவான சர்வங்காசனம், திரிகோணாசனம், பாத ஹஸ்தாசனம், புஜங்காசனம், அர்த்தசக்ராசனம், பிராணாயாம யோகாசனம் வக்ராசனம், தனுராசனம் போன்ற யோகாசனங்களை செய்ய மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தற்போதைய இக்கட்டான சூழலில் நடைபெற்ற யோகா பயிற்சி முகாம் ஆனது தங்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாகவும் உடல்நலனில் அக்கறை கொள்வதும் மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் உதவியதாக பயிற்சியில் பங்கு பெற்ற மாணவர்கள் தெரிவித்தனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை சாரநாதன் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் k.கார்த்திகேயன் ஏற்பாடு செய்திருந்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF
Comments