திருச்சி மாநகர காவல் துறையினருக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் கே.கே. நகர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இம்முகாமை மாநகர காவல் ஆணையர் அருண் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார். செய்தியாளரிடம் பேசிய திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் திருச்சி மாநகரத்தில் 1823 காவல்துறையில் பணிபுரிகின்றனர் இவர்களில் முதல் தவணை தடுப்பூசி 93 சதவீதம் பேருக்கு போடப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி 66 சதவீதம் பேர் அதாவது 630 பேருக்கு இன்றும் நாளையும் தடுப்பூசி சிறப்பு முகாம் ஏற்பாடு செய்து போட்டு வருவதாக குறிப்பிட்டார்.
காவல் துறையினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இரண்டு நாட்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்றார்.முகாமில் மருத்துவர் முகமது ஹக்கீம் தலைமையில் மருத்துவ குழு பணியில் ஈடுபட்டது.திருச்சி மாநகர துணை ஆணையர் சக்திவேல் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
Comments