பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், பழம்பெரும் தமிழ்திரைப் பட நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர், நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான சர் ஏ.டி.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தமிழக அரசு சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ஒரே வளாகத்தில் ரூ.1 கோடியே 85 லட்சத்து 34 ஆயிரம் செலவில் தனித்தனியாக மணிமண்டபங்கள் கட்டப்பட்டன.
இந்தநிலையில் மணிமண்டபங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக வருகிற 27-ந் தேதி திறந்து வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
மணிமண்டபங்களை திறந்தபிறகு பொதுமக்கள் பார்வையிடுவதற்கான நேரம் அறிவிக்கப்படும் எனவும் தெரிகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments