திருச்சி மாவட்டத்தில் பிரபல ரவுடிகள் பொதுமக்களை ஏமாற்றி நிலங்களை அபகரிப்பது சம்பந்தமாக திருச்சி எஸ்பி வருன்குமாருக்கு வந்த தகவலை தொடர்ந்து, கடந்த 19ம் தேதி இரவு திருச்சி மாவட்டத்தில் நில அபகரிப்பில் ஈடுபட்ட 14 ரவுடிகளின் வீடுகளில் தல ஒரு இன்ஸ்பெக்டர் உட்பட ஐந்து போலீஸ் அடங்கிய 14 குழுவினர் அதிரடியாக சோதனை செய்தனர்.
மேலும் ரவுடிகளின் வீட்டில் பொது மக்களிடம் இருந்து போலி ஆவணம் தயாரித்து அபகரிக்கப்பட்ட நிலத்தின் ஆவணங்களையும், ஆயுதங்களையும் பறிமுதல் செய்தார். அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சியை சேர்ந்த பிரபல ரவுடி பட்டறை சுரேஷ் என்பவரது வீட்டில் பெரிய அளவில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் பட்டறை சுரேஷ் கைது செய்யப்படாத நிலையில் முடுக்கு பட்டியில் உள்ள பட்டறை சுரேஷிற்கு சொந்தமான அவரது ஜல்லிக்கட்டு மாட்டு தொழுவத்தில் உள்ள ஜல்லிக்கட்டு மாடுகளை பராமரித்து வரும் அண்ணாமலை (22) மற்றும் ஏழுமலை (20) என்ற இரண்டு பேரை நேற்று திருச்சி எஸ்பி தனிப்படை போலீசார் கைது செய்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் அண்ணாமலை மற்றும் ஏழுமலை மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் இருவரையும் திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments