Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

இசைத்துறையில் சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு – ஆட்சித் தலைவர் தகவல்

இசையில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் கற்று பயன்பெறவும் அதனை மேம்படுத்தவும் 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துக் துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 17 மாவட்ட அரசுப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.

அதன்படி   திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு இசைப்பள்ளி  1997 முதல் தொடங்கப்பட்ட தற்போது ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு எனும் 32 மூல தோப்பு என்ற முகவரியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இசைப்பள்ளியில் குரலிசை நாதஸ்வரம் தவில் தேவாரம் பரதநாட்டியம் வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய இசை பயிற்சி வகுப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.இது மூன்றாண்டு சான்றிதழ் படிப்பாகும்.

இதில் 12 வயது முதல் 25 வயது வயது வரை உள்ள மாணவ மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர்.
 குரலிசை, வயலின், மிருதங்கம், மற்றும் பரதநாட்டிய பயிற்சிக்கு ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேவாரம் நாதஸ்வரம் தவில் ஆகிய கலைகளுக்கு ஆரம்ப கல்வி தகுதியில் சலுகைகள் உண்டு.

இப்பள்ளியில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முழு நேர பயிற்சி அளிக்கப்படுகிறது.
மூன்றாம் ஆண்டு இசைப் பயிற்சிக்கு பிறகு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும் பயிற்சி கட்டணமாக ரூபாய் 152 மட்டுமே வசூலிக்கப்படும்.
மாதம்தோறும் ரூபாய் 400 ஊக்கத்தொகை வழங்கப்படும் மேலும் வெளியூர் மாணவர்களுக்கு அரசு விடுதியில் இலவசமாக தங்கி பயிலும் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை அரசால் வழங்கப்படுகிறது.
இசைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை  ஜூலை 5-ஆம் தேதி முதல் நடைபெறும் இதில் பயில விரும்பும் மாணவ மாணவிகளை இசைப்பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள               0431-2962942 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்  என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு  தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *