Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் தொழில்சார் சமூக வல்லுநராக பணிபுரிய வாய்ப்பு – திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தகவல்

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம், உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படும் திட்டமாகும். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அந்தநல்லூர், மணிகண்டம், மணப்பாறை, முசிறி மற்றும் துறையூர் ஆகிய 5 வட்டாரங்களில் செயல்பட்டு வருகிறது. மேற்கண்ட வட்டாரங்களில் தனிநபர் மற்றும் கூட்டு நிறுவனங்களை அணித்திரட்டுதல், உருவாக்குதல் மற்றும் கள அளவிலான செயல்பாடுகளுக்கு ஆதரவை வழங்குதல் போன்ற
பணிகளை ஊராட்சி தோறும் மக்களிடையே கொண்டு செல்ல

“தொழில் சார் சமூகவல்லுநர்” (Enterprise Community Professional) ஊராட்சிக்கு ஒருநபர் வீதம் சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் தேர்வு செய்ய தகுதிகள் உடைய நபர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதிகள் : மகளிர் சுய உதவிகுழுவை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். அதே ஊராட்சியை சார்ந்தவராக இருத்தல் வேண்டும், 25 லிருந்து 45 வயது உடையவராக இருத்தல் வேண்டும், பட்டபடிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், குறிப்பாக வங்கியியல், சமூகபணி, வணிகவியல், வேளாண்மை, வணிக நிர்வாகம், கால்நடை அறிவியல் பட்டம் பெற்றவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்,

ஆன்டிராய்டுபோன் வைத்திருக்க வேண்டும் / பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும், வாழ்வாதார வளர்ச்சி மற்றும் தொழில் மேம்பாடு செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும், சமுதாயம் சார்ந்த அமைப்புகளின் நிர்வாகியாகவோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாகவோ இருக்கக் கூடாது. மேற்கண்ட தகுதிகளையுடைய நபர்கள் (30.11.2021) அன்று மாலை 5 மணிக்குள் தங்கள் ஊராட்சியில் செயல்பட்டு வரும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் / ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகம் அல்லது கீழ்கண்ட வட்டார அலுவலகங்களில் விண்ணப்பங்களை
சமர்ப்பிக்கலாம் மற்றும் பிற தகவல்களையும் பெறலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *