திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்க மாவட்டத்திலுள்ள பல்வேறு ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் 25 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கப்படுகிறது.
இதற்கிடையே ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்தால் வரி உயர்த்தப்படும், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் பாதிக்கப்படும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக திருச்சி நவல்பட்டு கிராம மக்கள் 100 மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு அளிக்க திரண்டனர். பின்னர் கோரிக்கை மனுவுடன் தங்களது ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments