Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

எங்க கட்சிகாரங்க முகசவரம் செய்ய கூட வழியில்லாமல் உள்ளனர் – அதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி

திருச்சி பெட்டவாய்த்தலை பழையூர் மேடு பகுதியில் அதிமுக அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் அழகேசன் தலைமையில் மகளிர் அணி பொறுப்பாளர்கள் கழக ஒன்றிய நிர்வாகிகள் கிளை கழக பொறுப்பாளர்கள்  உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ் அணியில் துணை ஒருங்கிணைப்பாளராக உள்ள கு.ப.கிருஷணன், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் முன்னிலையில் இணைந்தார்கள்.

இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் அணியின் துணை ஒருங்கிணைப்பாளருமான கு.ப.கிருஷணன் பேசிய போது….. எம்ஜிஆர் எழுதி வைத்த உயிலில் உள்ள சட்டவிதிகளை யாரும் திருத்தவும் முடியாது மாற்றவும் முடியாது. கட்சி அலுவலகத்தில் செங்கோல் காணவில்லை என குற்றச்சாட்டை வைக்கின்றனர்.

ஜெயலலிதாவிடம் நாங்கள் கொடுத்த அவ்வளவு செங்கோல்களும் எங்கே என கேட்டார். சிவி சண்முகத்திடம் கேட்கிறேன் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கையடக்க பை ஒன்றை வைத்திருந்தார். அதில் அனைத்து குறிப்புகளும் எழுதி வைக்கப்பட்டிருந்தது. அந்த குறிப்புகள் உள்ள கைபை எங்கே என விரைவில் தொண்டன் உங்களை கேட்பான்.

எம்.ஜி.ஆர் பணம் வேணும், சத்யா ஸ்டூடியோ வேணும் ஆனால் எம்ஜிஆர் சொன்னபடி நடக்க மாட்டோம் என சொல்வது என்ன நியாயம் என கேள்வி எழுப்பினார் .ஒற்றை தலைமை வேணும் அதுவும் எடப்பாடி தான் வேணும் என சொல்கிறார்கள். இரட்டை தலைமை இருக்கும் பொழுது கருத்து பரிமாற்றம் இருக்கும் ஒருவருக்கொருவர் பேசி முடிவெடுக்க முடியும்.

மேலும் பேசிய அவர்…கொள்கைக்கான கூட்டம் இது. காக்கா கூட்டம் அல்ல கார்மேக கூட்டம். ஆகவே ஓபிஎஸ்யை தொண்டனாக ஏற்று நமக்காக சிந்து பாட தலைமை தேர்ந்தெடுத்துள்ளோம். முதல் பிள்ளையார் சுழியாக அழகேசனில் இன்று திருச்சியில் துவக்கி உள்ளோம். மாதம் ஒரு விக்கெட் விழும் என்றார். எங்கும் எதையும் இவர்கள் (இபிஎஸ் அணி) சாதித்து விடவில்லை. நாலாரை ஆண்டு காலம் மக்களை மறந்துவர்கள். மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்.மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாதவர்கள் இனி புரிந்து கொண்டு   வாழவே முடியாது என்றார்.

பின்னர் செய்தியாளருக்கு பேட்டியளித்த கு.ப. கிருஷ்ணன்……. நாங்கள் யாரையும் இழுக்க வேண்டிய அவசியம் இல்லை. காவிரி ஆற்றில் வரும் வெள்ளம் போல பிரவாகம் போல அனைவரும் எங்களிடம் வந்து விடுவார்கள். இடைக்கால பொதுச் செயலாளர் என்பதே அதிமுக சட்டவிதியில் இல்லை. நாங்கள் தான் அண்ணா திமுக எம்ஜிஆர் கொள்கையை ஏற்றுகொண்டவர்கள் ஜெயலலிதா சித்தாந்தத்தை  ஏற்றுக் கொண்டு பின்பற்றுவர்களும் நாங்கள் தான் அண்ணா திமுக.  தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் பெயர்தான் முதலில் உள்ளது. 

நேர்மையான உண்மையான ஆட்சி நடத்தி இருந்தால் எங்க கட்சிகாரங்க செல்வ செழிப்போடு இருந்திருப்பார்கள். ஆனால் தற்பொழுது பாருங்கள் மற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று. தற்போது எங்க கட்சிகாரங்க முகத்தை பாருங்கள். முகசவரம் செய்ய கூட வழியில்லாமல் உள்ளனர் என குறிப்பிட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *