Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஆரோக்கியமான உணவு குறித்த விழிப்புணர்வு -அடுப்பில்லா சமையல் போட்டி

உணவே மருந்து என்ற வாழ்வியலை கொண்ட நாம் நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் ஆரோக்கியமற்ற உணவு முறைகளை பின்பற்றி வருகிறோம் இதனால் பல நோய்கள் ‌ ஏற்படும் சூழலை உருவாக்கியுள்ளோம்.

ஆரோக்கியமான உணவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அடுப்பில்லா சமையல் என்ற பெயரில் Talam.shop மற்றும் அறுசுவை ஆற்றல் இணைந்து நடத்திய அடுப்பில்லா சமையல் போட்டி ‌ கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது.

விதவிதமாகவோ ஒரே மாதிரியாகவோ சாப்பிடும் வழக்கத்துக்கு இடையில் வாரத்தில் ஒரு நாளாவது எளிய உணவைச் சாப்பிடலாம். இதற்காகத்தான் பண்டிகை, விசேஷ நாட்களில் குறிப்பிட்ட சில விரதம் இருக்கும் முறையைப் பலரும் கடைப்பிடித்தனர். சமைக்காத உணவுக்கும் நாம் அடிக்கடி இடம் தரலாம். இதனால் ஆரோக்கியம் மேம்படுவதுடன் வழக்கமான உணவிலிருந்து விடுதலை பெறலாம். அடுப்பில்லாமல் செய்யக்கூடிய ‌ உணவு வகைகள் குறித்த சமையல் போட்டிமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் ‌ போட்டியானது நடைபெற்றது.

போட்டியில் கலந்து கொண்ட பெண்கள் அனைவரும் ஆரோக்கியமான அடிப்பில்லா இயற்கை உணவுகளானமுட்டைகோஸ் சமோசா,ஹெல்த்தி மயோனிஸ்,வேக வைக்காத இட்லி,தயிர் இல்லா தயிர் சாதம்,குக்கர் இல்லா பிரியாணி,கசகசா அல்வாபோன்ற அட்டகாசமான உணவுகளுடன் இப்போட்டி நடந்தது.

இப்போடிக்கு சிறப்பு விருந்தினராக மாஸ்டர் செஃப் டைட்டில் வின்னர் தேவகி கலந்து கொண்டார். அவர்களுடன் அறுவை ஆற்றல் நிறுவனர் ஆற்றல் சரண்யா இப்போட்டியை சிறப்பாக ஏற்பாடு செய்தார். போட்டியில் 15க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் பரிசு – தீக்ஷித்தா, இரண்டாம் பரிசு – சித்ரா, மூன்றாம் பரிசு – ஜனனி ஆகியோர் பெற்றனர். அறுசுவை ஆற்றல் நிறுவனர் சரண்யா போட்டி குறித்து கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவு என்பது இன்றியமையாததாகும்.

பொதுமக்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இது போன்ற போட்டிகளை நடத்தி வருகிறோம் தொடர்ந்து இது போன்ற போட்டிகளை நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…    https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *