திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தின்
காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை
நிலைநாட்டும் பொருட்டு, சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், குற்றச்
செயல்களில் ஈடுபடும்
கெட்ட நடத்தைக்காரர்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஈடுபடுவோர் மற்றும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்களிடமிருந்து குற்றம் புரியமாட்டேன் என நன்னடத்தை பிணையம் பெற்றும் அதனை மீறுவோர் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கௌ்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது. அதன்படி, திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தவர்களிடம் பொது அமைதியை பேணிக்காப்பதற்காகவும், நன்னடத்தைக்கான பிணையம் பெறவேண்டி கடந்த 6 மாதங்களில் 491 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு நன்னடத்தைக்கான பிணையம் பெற்றிருந்தும், அதனை மீறி குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு பிணையத்தை மீறிய 19 ரவுடிகள் உட்பட 24 நபர்களை திருச்சி மாநகர நிர்வாக செயல்துறை நடுவர் அவர்களால், மீதமுள்ள காலத்திற்கு சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
இவர்களில், 6 நபர்களுக்கு 300 நாட்கள் மேல் சிறைதண்டனையும், 13 நபர்களுக்கு
200 நாட்கள் மேல் சிறைதண்டனையும் மற்றும் 5 நபர்களுக்கு 200 நாட்களுக்குள்
சிறைதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருச்சி மாநகரத்தில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு சட்ட விரோதமாக
செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், கெட்ட நடத்தைக்காரர்கள், வழிப்பறி குற்றச்சம்பவங்கள் மற்றும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான
நடவடிக்கைகளை தெடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO
Comments