திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் திருச்சி திருவெறும்பூர் காட்டூர் உருமு தனலெட்சுமி கல்லூரி மற்றும் துவாக்குடி அரசு கலை கல்லூரி மாணவர்கள்
உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். மாநில அரசு தலையிட்டு தேர்வு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் மாணவ மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கைது செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments