திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் இனாம் சமயபுரம் பகுதியில் நேற்று முன்தினம் டிரான்ஸ்பார்மர் வெடித்ததாகவும், தற்பொழுது வரை சரி செய்யப்படாததால் இனாம் சமயபுரம் முழுவதும் இரண்டு நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இனாம் சமயபுரம் ஊராட்சியில் உள்ள பழுதான ட்ரான்ஸ்பார்மர் இரவோடு இரவாக சரி செய்யும் பணி துரிதமாக நடைபெற்றது.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments