திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு கோட்டங்களில் எட்டு இடங்களில் இன்று 3200 கோவிசீல்டு தடுப்பூசி மட்டுமே போடப்படும் என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார். இந்நிலையில் திருச்சி பெரிய மிளகுபாறையில் உள்ள திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏராளமான பொதுமக்கள் நீண்ட நேரம் காத்துக் கொண்டு உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை 5லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோவிட் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக திருச்சியில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படவில்லை காரணம் கையிருப்பில் தடுப்பூசி இல்லாமல் இருந்ததும் தடுப்பூசி வராதும் முகாம் நடத்தப்படாமல் என்பதற்கான காரணம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
மீண்டும் இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று(29.06.2021) திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட பகுதியில் குறைந்த அளவு வந்த 7400 கோவிசீல்டு தடுப்பூசிகளை செலுத்துவதற்கு மையங்களில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து போட்டுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC
Comments