திருச்சி மாவட்டம் லால்குடி கிராமத்தை சேர்ந்தவர் செண்பகவள்ளி. இவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பூபதி. இந்நிலையில் செண்பகவல்லி தன்னுடைய வீட்டில் ஒரு நாயை வளர்த்து வருகிறார். கடந்த 20ஆம் தேதி செண்பகவள்ளி நாய் பூபதியை பார்த்து குரைத்ததால் பூபதி தன்னுடைய கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதனால் செண்பகவல்லி மற்றும் பூபதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பூபதி கையில் வைத்திருந்த கத்தியால் செண்பகவல்லியின் மகன் சத்தியமூர்த்தியின் வயிற்றில் குத்தியுள்ளார். இதுகுறித்து லால்குடி காவல் நிலையத்தில் செண்பகவல்லி கொடுத்த புகாரின் அடிப்படையில் பூபதி மற்றும் பஞ்சவர்ணம் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பூபதி கைது செய்யப்பட்டுள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments