திருச்சி மண்டல மத்திய மண்டல தீயணைப்பு துறை நிலையை அலுவலகத்தில் சிலிண்டரில் ஆக்சிஜன் நிரப்பும் பணியில் ஈடுபட்ட போது சிலிண்டர் வெடித்தது. இதில் தீயணைப்பு வீரர் பிரசாந்த் இடது காலில் படுகாயமடைந்தார். அப்பொழுது நிலைய அலுவலர் சரவணன் உடன் இருந்துள்ளார்.
தீயணைப்பு நிலைய போக்குவரத்து பிரிவு அலுவலகத்தில் இச்சம்பவம் நடந்தது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேல் சிகிச்சைக்காக தற்போது பிரசாந்த் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆக்ஸிஜன் சிலிண்டர் நிரப்பும் பொழுது கையாள்வதில் ஏற்பட்ட சிக்கலால் விபத்து ஏற்பட்டு இருக்குமா என்ற கோணத்திலும் அல்லது விபத்திற்கான வேறு ஏதும் காரணங்கள் இருக்குமா என்றும் விபத்துக்கு குறித்து அமர்வு நீதிமன்ற காவல் நிலைய ஆய்வாளர் சேரன் மற்றும் உதவி ஆய்வாளர் மோகன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments