திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் வையம்பட்டி ஒன்றியம் அணியாப்பூர் மக்கள் நீண்ட நாட்களாக என்னிடம் வைத்த கோரிக்கையை கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நான் உரையாற்றும் போது
அணியாப்பூர் ஆரம்ப சுகாதார நிலையம் புதியதாக கட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.சட்டமன்ற வளாகத்தில் தமிழக முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தி கடிதம் அளித்தேன்.தமிழக முதலமைச்சர் அவர்களிடம் அளித்த கோரிக்கை ஏற்கப்பட்டது
எனவும் விரைவில் 150 இலட்சம் செலவில் புதிய மருத்துவ மனை கட்டிடம் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசின் மருத்துவ துறை எனக்கு பதில் அளித்து கடிதம் அனுப்பி இருக்கிறது.
மணப்பாறை தொகுதி அணியாப்பூர் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் தொகுதி
மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments