திருச்சி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதி பச்சைமலை. திருச்சி மாவட்டத்தின் எழிலரசி அழைக்கப்படும் பச்சைமலை யில் தென்புறநாடு, வண்ணாடு, கோம்பை ஆகிய மூன்று ஊராட்சிகள் உள்ளன துறையூர் அடுத்த உப்பிலியபுரம் வழியாகபச்சைமலைக்கு சோபானபுரத்திலிருந்து டாப் செங்காட்டுப்பட்டி வரை சாலையின் நீளம் 14 கிலோமீட்டர். கடந்த ஏழு எட்டு வருடங்களாக சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக இருந்தது. புதிதாக சாலை அமைக்க கோரி மலைவாழ் மக்கள் பலமுறை போராட்டம் நடத்தினர். தற்பொழுது ஆதிதிராவிட நலத்துறை சாலை அமைக்கும் பணிக்கு ரூ.8.5 கோடி நிதி மாவட்ட வனத்துறை வழங்கப்பட்டது சோமன பரம்பரையில் உள்ள சாலை ரூ 7 கோடி செலவிலும், துறையூர் பகுதி வழியாக மூலக்காட்டில் இருந்து மணலோடை சாலை பராமரிப்பு பணிக்கு ரூ.1.5 கோடி புதிய தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
13 Jun, 2025
389
28 April, 2023










Comments