திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் நெல் வயல்வெளி பள்ளி வகுப்பானது இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் உதவி விதை அலுவலர் துரைசிங்கர் வரவேற்பு உரை ஆற்றினார். திருவாசி ஊராட்சி மன்ற தலைவர் பானு முருகேசன் தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார்.
வேளாண்மை அலுவலர் பரமசிவம் தமிழ் நாடு நீர்வள நிலவள திட்டம் குறித்தும் நடப்பு ஆண்டில் உள்ள திட்டங்கள் குறித்தும் விதை தேர்வு, விதை நேர்த்தி, நாற்றங்கால் பராமரிப்பு மற்றும் உயிர் உரங்கள் பயன்பாடுகள் குறித்தும் விளக்கமாக உரை ஆற்றினார். விதை சான்றளிப்பு துறையின் சார்பில் விதை சான்று அலுவலர் ரமேஷ் சான்று பெற்ற விதைகள் குறித்தும் விதை பண்ணை அமைப்பது குறித்தும் உரை ஆற்றினார்.
உதவி தொழில்நுட்ப மேலாளர் சிந்தியா நன்றி உரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் செய்திருந்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments