திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2020 – 2021 ம் ஆண்டில் தீண்டாமை கடைபிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் சிறந்த கிராமமாக தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பைத்தம்பாறை கிராமத்தினை தேர்வு செய்யப்பட்டது.
இந்த கிராமத்தின் வளர்ச்சிக்காக ரூபாய் 10.00 இலட்சத்திற்கான (ரூபாய் பத்து இலட்சம்) காசோலையினை பைத்தம்பாறை ஊராட்சித் தலைவரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு வழங்கினார். தாத்தையங்கார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர், தாத்தையங்கார்பேட்டை சேர்மன் சர்மிளா பிரபாகரன் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஆகியோர் உடன் இருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx
Comments