திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சியில் சட்ட விரோதமாக அனுமதியின்றி செம்மண் அள்ளுவதாக துறையூர் வட்டாட்சியர் வனஜாவிற்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் ரங்கநாதபுரத்தை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை ஆய்வு செய்ய வட்டாட்சியர் கூறியுள்ளார்.
 அதன் அடிப்படையில் இரவு பத்து  மணி அளவில் நரசிங்கபுரம் பகுதியில் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் ஆய்வு செய்தபோது அங்கு அனுமதி இன்றி ஒரு ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் டிராக்டர் மண் அள்ளுவதை பார்த்து உள்ளார். இதனை தொடர்ந்து அவர் வண்டி எண்களை குறித்துக் கொண்டு வரும் பொழுது

 அவரை வழிமறித்த  நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகளான ஜேசிபி உரிமையாளர் மணி மற்றும் ஜேசிபி ஓட்டுநர் தனபால் ஆகியோர் வட்டாட்சியரை ஒருமையில் பேசியதோடு அவரை கண்மூடித்தனமாக வருவாய் ஆய்வாளர் பிரபாகர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 இதனால் படுகாயம் அடைந்த வருவாய் ஆய்வாளரை கிராம நிர்வாக அலுவலர் சாமிநாதன் பெருமாள் பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்பு துறையூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் துறையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் துறையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்

 கடந்த மாதம் கிராம நிர்வாக அலுவலரை மணல் கொள்ளையர்கள் கொலை செய்த சம்பவத்தை தொடர்ந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று தமிழக கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழக அரசிடம் துப்பாக்கி உரிமம் கேட்டது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து மீண்டும்  துறையூர் பகுதியில் வருவாய் துறையினர் மீது மணல் கொள்ளையர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர்.

 துறையூர் பகுதியில் மணல் கொள்ளையர்களை தடுக்க சென்ற அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் பொதுமக்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பாதுகாப்பு உறுதி செய்து அச்சத்தை தவிர்ப்பாரா என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

                                             13 Jun, 2025
                            13 Jun, 2025                           384
384                           
                                             
         28 May, 2023
 28 May, 2023
            
Comments