லால்குடி அடுத்த பல்லபுரம் கிராமத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஊராட்சி மன்ற செயலர் போலீசார் கைது செய்துள்ளனர்.
Advertisement
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த பல்லபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் ஊராட்சி மன்ற செயலர் சந்திரசேகர் (53) என்பவர் தன்னுடைய வீட்டில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று மதியம் பெட்டி கடைக்கு இரண்டு குழந்தைகள் தின்பண்டம் வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது குழந்தைகளிடம் சந்திரசேகர் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரியவருகிறது.
Advertisement
பெட்டிக் கடைக்கு சென்ற குழந்தைகள் வெகு நேரம் திரும்பி வராததால் பெற்றோர்கள் தேடிச் சென்றுள்ளனர் அப்போது இரண்டு குழந்தைகளும் அழுதுகொண்டே உடலில் காயங்களுடன் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து குழந்தைகள் பெற்றோரிடம் தெரிவித்தனர். சந்திரசேகரை தேடி சென்றபோது அவர் தப்பி ஓடியுள்ளார்.
மேலும் ஏற்கனவே ஒருமுறை பெண் குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டு பிரச்சனையில் சிக்கியது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளும் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் லால்குடி மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஊராட்சி மன்ற செயலர் சந்திரசேகர் கைது செய்தனர்.
Comments