திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பாரதியார் நகரில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 24ம் ஆண்டு தீமிதி திருவிழாவானது கடந்த 29ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து நேற்று அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் மேளதாளங்கள் மற்றும் வானவேடிக்கையுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முக்கிய நிகழ்வாக கோவில் முன்பு அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
இதில் அப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் நவல்பட்டு தலைவர் ஜேம்ஸ் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள போலீஸ்காலனி, அண்ணாநகர், பர்மா காலனி மற்றும் அனைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments