திருச்சி திருவெறும்பூர் அருகே நவல்பட்டு அண்ணா நகரில் உள்ள சக்தி விநாயகர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
திருவெறும்பூர் அருகே உள்ள அண்ணா நகரில் சக்தி விநாயகர் ஆலயத்தில் உள்ளது. இதில் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சாமியும் உள்ளது.
இந்நிலையில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்குபக்தர்கள் பால்குடம்எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியதோடு சுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments