திருச்சி மாவட்டம் கம்பரசம்பட்டை ஊராட்சியில் அய்யாளம்மன் படித்துறை பகுதியில் ரூபாய் 13.70 கோடி மதிப்பீட்டில்1.63 ஹெக்டார் பரப்பளவில் பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியினை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் பொன்னையா ஆகியோர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதன்பின் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில்….. தற்போது பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. விரைவில் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்துடன் சேர்ந்து பறவைகள் பூங்காவும் திறக்கப்படும். இதேபோல் முக்கொம்பு மற்றும் வண்ணத்துப்பூச்சி இன்னும் பூங்கா ஆகியவற்றை மேம்படுத்த நிதி கேட்டு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என்றார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments