திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மூலம் மேலரண் சாலையில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் மாநகராட்சி மூலம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வாகனங்களை இந்த வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்திக் கொள்ள மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேலாண் சாலையில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் மாநகராட்சி மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. ேற்கண்ட வாகன நிறுத்தும் இடத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு 6 மணி நேரத்திற்கு ரூபாய் 10 ரூபாய் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 6 மணி நேரத்திற்கு ரூபாய் 50 மாநகராட்சி மூலம் வசுலிக்கப்படுகிறது
இன்று ஒரே நாளில் 350 நாண்டு சக்கர வாகனங்களும், 140 இருசக்கர வாகனங்களும் பன்னடுக்கு வாகன நிறுர்த்தும் இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரிய கடை வீதி, சிங்காரத்தோப்பு, சூப்பர் பஜார், என் எஸ் பி ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து சீராக உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments