பூமி உள்ளிட்ட 8 கோள்கள் அடங்கிய நமது சூரியக்குடும்பம் என்பது இன்றளவும் நமக்கு முழுமையாக புரியா த, இயற்கையின் ஒரு விந்தையாகவே உள்ளது. நம்மை ஆச்சரியப்படுத்தும் பல அற்புதமான, அரிய வகை நிகழ்வுகள் அடிக்கடி வானில்அரங்கேறிய வண்ணம்தான் உள்ளன. அந்த வகையில், 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் நேற்று மற்றும் இன்று (ஜுன் 4) வானில் நிகழ்ந்தது. இது கிரகங்களின் அணிவகுப்பு PARADE OF PLANETS அல்லது கோ ள்களி ன் சீரமை ப்பு PLANETS ALIGNMENT என அழைக்கப்படுகிறது.
புதன், செவ்வாய், வியாழன், சனி, யூரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் வந்தது. நேரு நினைவு கல்லூரியில் காலை 4.30 மணி முதல் அழகிய நிலா, செவ்வாய், வளையங்க்களுடன் சனிகோள், பட்டையுடன் வியாழன் கோள், ஆகியவை அதிநவீன தொலைநோக்கி வழியாக காண்பிக்கப்பட்டது. கல்லூரித் தலைவர் பொன்.பாலசுப்பிரமணியன், கல்லூரி செயலர் பொன்.இரவிச்சந்திரன், முதல்வர் முனைவர் வெங்கடேசன், ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.மீனாட்சி சுந்தரம், துறை தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியை இயற்பியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் கபிலன் ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்வில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொலைநோக்கி வழியாக நிலவு மற்றும் கோள்களை கண்டு களித்து வியப்படைந்தனர். தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் சங்கம், நேரு நினைவுக் கல்லூரி, இந்த வான்நோக்கும் நிகழ்ச்சி நடத்தியது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments