திருச்சி விமான நிலையத்துக்கு கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்பொழுது ஒரு பயணி எடுத்து வந்த விளையாட்டு பொருட்களான கலர் கிளிக்கூண்டு நாய் பொம்மைகளில் தங்கம் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து அவருடன் விசாரணை நடத்தி விளையாட்டு பொருட்களில் கடத்தி வந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
பொம்மைகளிலிருந்து 216 கிராம் எடை கொண்ட 12 லட்சத்து 84ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments