திருச்சி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், தொப்பம்பட்டி ஊராட்சி தொப்பம்பட்டி காலனி பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில் காவிரி குடிநீர் இணைப்பு மற்றும் ஆழ்குழாய் போர்வெல் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வழங்கப்படாத நிலையில் ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டுள்ளனர்.
உரிய நடவடிக்கை இல்லாத காரணத்தால் மணப்பாறை குளித்தலை சாலை கொட்டப்பட்டு பிரிவு என்ற இடத்தில் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணப்பாறை போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் மணப்பாறை குளித்தலை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments